ஐபிஎல்லில் இருந்து வீரர்கள் வெளியேற முடியாது, அதிரடி திட்டம் வகுத்த BCCI …!

ஐபிஎல்லில் இருந்து வீரர்கள் வெளியேற முடியாது, அதிரடி திட்டம் வகுத்த BCCI …!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முறையான காரணமின்றி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) வீரர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து வீரர்கள் வெளியேறுவது தொடர்பான புதிய கொள்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) திட்டமிடத் தொடங்கியது. ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்ட பின்னர் சில வீரர்கள் டி20 லீக்கில் இருந்து விலகியமை இந்த புதிய நடைமுறைக்கான காரணமாகும்.

 

சமீபத்தில், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 மெகா ஏலத்தில் உரிமையாளர்களால் வாங்கப்பட்ட பின்னர் சில இங்கிலாந்து நட்சத்திரங்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இல் இருந்து வெளியேறினர்.

2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தனது பெயரை திரும்பப் பெற முடிவு செய்தார், அது குஜராத்க்கு பெரும் அடியாக இருந்தது.

மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பயோ-பபிள் சோர்வைக் காரணம் காட்டி போட்டியிலிருந்து விலகினார்.

7.5 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், இந்தியன் பிரீமியர் லீக் 2022ல் காயம் காரணமாக வெளியேறினார்.

நிறைய திட்டமிடலுக்குப் பிறகு, உரிமையாளர்கள் வீரர்களை ஏலம் எடுக்கிறார்கள், மேலும் ஒரு வீரர் ஐபிஎல்லில் இருந்து “flimsy reasons,” “மெலிதான காரணங்களுக்காக” வெளியேறினால், அதன் உரிமையாளர் பாதிக்கப்படுகிறார்.

“லீக்கின் முக்கியமான பங்குதாரர்களான உரிமையாளர்களுக்கு அது சிக்கலுக்குரியது , அவர்கள் பல திட்டமிடலுக்குப் பிறகு ஒரு வீரரை ஏலம் எடுத்தனர். ஒரு வீரர் வெளியேறினால் அவர்களின் கணக்கீடுகள் மோசமாகிவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Mark wood

“ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய அனைவரும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தடுக்கப்படுவார்கள் என்ற ஸ்வீப்பிங் கொள்கை இருக்காது. இது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் இருக்கும் மற்றும் நடவடிக்கை தொடங்கும் முன் சில ஆய்வுகள் செய்யப்படும். காரணம் உண்மையானதாக இருந்தால் என்ன, ”என்று பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது.

இதன்காரணத்தால் இவ்வாறான திடீர் விலகலை தடுக்கவும், அல்லது அடுத்துவரும் IPL பருவ காலங்களில் அவர்களை சேர்க்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய வருகின்றது.