ஐபிஎல் ஆடப்போகும் பாகிஸ்தானின் முகமது ஆமிர்….!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த மொகம்மட் ஆமீர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுப்பதாக அறிவித்திருந்தார்.

சூதாட்ட சிக்கலில் அகப்பட்டு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆமீர், இளம் வயதிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்திருந்நார்.

இங்கிலாந்தில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை மணம் முடித்து இருக்கும் ஆமீர், இப்போது இங்கிலாந்து குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இப்படி இங்கிலாந்து குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவருக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைக்குமாக இருந்தால் அதனை பயன்படுத்திக் கொண்டு இவரால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியும் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்திருக்கின்றது.

இதேபோன்று பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் அசார் மஹ்மூத் பாகிஸ்தானில் பிறந்து இருந்தாலும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆமீரை  ஐபிஎல்லில் காணும் வாய்ப்பு வரப்போகிறது.