ஐபிஎல் ஆரம்பமாக முன்னரே தமிழக வீரருக்கு வந்த சோதனை- தொடரிலிருந்து உபாதையால் விலகல்..!

ஐபிஎல் ஆரம்பமாக முன்னரே தமிழக வீரருக்கு வந்த சோதனை- தொடரிலிருந்து உபாதையால் விலகல்..!

14வது ஐபிஎல் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் திகதி ஆரம்பமாகி இருக்கின்ற நிலையில், ரசிகர்கள் பெருவாரியாக அந்த போட்டி தொடருக்கு காத்திருக்கிறார்கள் .

ஐபிஎல் இன் முதல் பாதி ஆட்டம் இந்தியாவில் இடம்பெற்றது பின்னர் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் தமிழக வீரர்கள் பலர் இந்த ஐபிஎல் அணிகளில் அங்கம் வகித்துள்ளனர், குறிப்பாக தமிழ்நாடு அணி  செய்த முஷ்டாக் அலி தொடரை வெல்வதற்கு காரணமாக இருந்த முன்னணி இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த் உபாதை காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் உபாதையால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சித்தார்த்துக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா எனும் வீரர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்வாகம் அறிவித்தது.

தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழ்நாடு சாயித் முஷ்டாக் அலி தொடரை வெற்றுகொள்ள அந்த அணியின் முக்கியமான வீரராக சித்தார்த் மணிமாறன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.