ஐபிஎல் ஆர்சிபி அணியில் இணையக் காத்திருக்கும் குட்டி வில்லியர்ஸ்…!

ஐபிஎல் ஆர்சிபி அணியில் இணையக் காத்திருக்கும் குட்டி வில்லியர்ஸ்…!

இளையோர் உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, இந்த உலகக்கிண்ண போட்டிகளில் அதிக அளவு பேசுபொருளாக இருப்பவர் தென்னாபிரிக்காவின் குட்டி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் 19 வயதான டேவால்ட் பிரேவிஸ் .

அச்சு அசலாக வில்லியர்ஸை பிரதிபலிக்கும் விதமாக துடுப்பாட்ட சாயலைக் கொண்டிருக்கிறார் என்றும் 17 ஆம் இலக்க சீருடையோடு ஆடுகளம் புகுந்து எட்டுத்திக்கும் பந்துகளை பறக்க விடுவதில் வல்லவராகத் திகழ்பவர் பிரேவிஸ்.

AB de யின் நீண்டகால ரசிகராக இருக்கும் பிரேவிஸ், அடுத்து வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் ஏலத்துக்கு தன்னுடைய பெயரையும் பதிவு செய்திருப்பதாகவும் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பது தன்னுடைய நெடுநாள் கனவு எனவும் தெரிவித்துள்ளார்.

தான் Ab de மற்றும் விராட் கோலி ஆகியோரின் மிகப் பெரிய விசிறி எனவும் இதன் காரணத்தாலேயே தான் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுள்ள நிலையில், அவரை நினைவுபடுத்த ஓர் குட்டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்கு வருகிறாரா என்று பார்க்கலாம் .