ஐபிஎல் இல் ஆட்சி புரிய வரும் அவுஸ்திரேலியாவின் புதிய புயல்..!

ஐபிஎல் இல் ஆட்சி புரிய வரும் அவுஸ்திரேலியாவின் புதிய புயல்..!

அவுஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில் இப்போது இரண்டாம் கட்ட IPL போட்டிகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக போட்டிகளை கைவிட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு மாற்று வீரர்களை தேடும் பணியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஜை ரிச்சட்சன் மற்றும் மெடரித் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறியவருகிறது.

இதன் காரணத்தால் அவர்கள் இருவருக்கும் பதிலாக அவுஸ்திரேலியாவில் இருந்து இன்னுமொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  நாதன் இலிஸ் எனும் இளம் பந்துவீச்சாளர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் பங்களாதேஷ்  அணிக்கு எதிரான டுவென்டி டுவென்டி தொடரின் போது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனையை நிலைநாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக அதிக விலைக்கு ஏலம் போயிருந்த ரிச்சர்ட்சன் மற்றும் மெடரித் ஆகியோர் இரண்டாம் கட்ட IPL போட்டிகளில் விளையாட முடியாது போய் உள்ளமையும் பஞ்சாப் அணிக்கு நெருக்கடியான நிலமையே , அதனை நிவர்திக்கும் பொறுப்பு இப்போது புதிய வீீரர் இலிஸ் வசமாகியுள்ளது.