ஐபிஎல் இல் இருந்து வெளியேறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் -திடீர் விலகலுக்கு காரணம் என்ன ?
ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அடுத்து வரவுள்ள சர்வதேச போட்டிகளை காரணம் காட்டியும் ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்ட போட்டிகளில் பலர் வெளியேறியிரருந்தனர்.
இதன் அடிப்படையில் புதிய வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றன .
இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் சன் ரைசேர்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவருடைய தகப்பனார் மரணம் ஆனதை தொடர்ந்து உடனடியாக ஷெர்பேன் ரூதர்போர்ட் மேற்கிந்திய தீவுகள் செல்வதாாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.