ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம் போகப்போகும் இளையோர் உலகக்கிண்ணத்தில் கலக்கிய இளசுகள் நால்வர் ..!

ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம் போகப்போகும் இளையோர் உலகக்கிண்ணத்தில் கலக்கிய இளசுகள் நால்வர் ..!

இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, சனிக்கிழமை மாலை 6.30 க்கு இளையோர் உலகக் கிண்ணத்தின் மாபெரும் இறுதி போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

 இளையோர் உலகக்கிண்ண போட்டிகளில் கலக்கிய அதிகமானவர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் போகலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கை அணித்தலைவர் தெனித் வெல்லலகே, குட்டி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் தேவால்ட் பிரேவிஸ், இது மாத்திரமல்லாமல் இந்திய அணியின் அணித்தலைவர் யஷ் துல் மற்றும் பாபா ஆகிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்படலாம் என நம்பப்படுகிறது.

வருகின்ற 12 மற்றும் 13 திகதிகளில் பெங்களூரில் ஐபிஎல் ஏலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleபாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு போட்டி தடை விதித்தது ஐசிசி_ திடீர் அறிவிப்பால் கலங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்..!
Next articleபாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலா, முழுமையான அட்டவணையை அறிவித்தது ஆஸ்திரேலியா, 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளடக்கம் ..!