அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் 14 கோடிக்கு மேல் ஏலம் போகப்போகும் இளம் வீரர் யார் தெரியுமா ? மஞ்சரேக்கர் கணிப்பு..!
14வது ஐபிஎல் போட்டி தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று கொண்டிருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வரும் இரண்டாம் பாதி ஆட்டங்களில் தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
இதற்கு வெங்கடேஸ் ஐயர் எனும் சகலதுறை ஆட்டக்காரருடைய பங்களிப்பு பிரதானமான காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெங்கடேஸ் ஐயர் தொடர்பில் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஒக்சனில் குறைந்தது 12 முதல் 14 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஐபிஎல் அணிகள் இலக்கு வைக்கும் என தெரிவித்திருக்கிறார்.
“நான் 12-14 கோடிகளை யோசித்து வருகிறேன், ஏனென்றால் இது ஒரு வகையான ஃப்ளூக் ஷோ அல்ல. நான் அவரது பெஸ்ட் கிளாஸ் போட்டிகளின் பெறுதிகளை பார்த்துக் கொண்டிருந்தேன், அவருடைய லிஸ்ட் A சாதனையும் சிறப்பாக உள்ளது. அவரது சராசரி 47, 92 ரன்கள். அத்தோடு அவர் ஒரு பந்துவீச்சாளர், கடைசி போட்டியில், அவர் கடினமான ஓவர்களை கூட வீச முடியும் என்று காட்டியுள்ளார். அதனால் அவர் மிக அதிக விலையை பெற போகிறார்.
மஞ்சரேக்கர் மேலும் கூறுகையில், “அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் நான் கவனம் செலுத்தினேன். மிகவும் சுவாரஸ்யமாக, அவர் பேக்ஃபுட்டில் நிறைய பேட் செய்கிறார். புல் ஷொட் நன்றாக தெரிகிறது, கட் ஷொட் விளையாடுகிறார்.
அவரை ஒரு உண்மையான தகுதி வாய்ந்த டி 20 விளையாட்டு வீர்ராக நான் பார்க்கிறேன் எனவும் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்தார்.