ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் ’திரில்’ வெற்றி

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் ’திரில்’ வெற்றி

கொல்கத்தாவை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையில் இன்று நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, அந்த அணியின் தொடங்க வீரர்களாக விர்திமன் சஹா மற்றும் ஷுக்மன் கில் களமிறங்கினர். கில் 7 ரன்னிலும், சஹா 25 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்துவந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 67 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்துவந்த பிற வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது, கொல்கத்தா தரப்பில் ரசல் 1 ஓவர் வீசி 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன் களமிறங்கினர். பில்லிங்ஸ் 4 ரன்னிலும், நரைன் 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் 12 ரன்னிலும், நிதிஷ் ரானா 2 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த ரிங்கு சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார். ஆனால், இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.

#Abdh