ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிப்பு
ஐபிஎல் 2022 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.
2021 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மோசமாக விளையாடி 14 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று கடைசி இடம் பிடித்தது.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரையன் லாரா – திட்டமிடல் & பேட்டிங் பயிற்சியாளர்
டாம் மூடி – தலைமைப் பயிற்சியாளர்
சைமன் கடிச் – உதவிப் பயிற்சியாளர்
முரளிதரன் – திட்டமிடல் & சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர்
டேல் ஸ்டெய்ன் – வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர்
ஹேமங் பதானி – ஃபீல்டிங் பயிற்சியாளர் & புதிய வீரர்களைக் கண்டுபிடிக்கும் பணி
#Abdh