ஐபிஎல் – சிஎஸ்கே அணி கண்டிப்பாக இந்த 4 இளைஞர்களுக்கு வாய்ப்பு தரனும்.. எதிர்காலமே இவங்க தான்..!

ஐபிஎல் – சிஎஸ்கே அணி கண்டிப்பாக இந்த 4 இளைஞர்களுக்கு வாய்ப்பு தரனும்.. எதிர்காலமே இவங்க தான்..!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆக களம் இறங்குகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ளுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தோனிக்கும் இதுதான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் அவரை கோப்பையுடன் வழி அனுப்ப சிஎஸ்கே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுக்கான அணியை உருவாக்க வேண்டிய நிலையிலும் சிஎஸ்கே அணி இருக்கிறது.

அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு இருப்பதால் எந்தெந்த இளம் வீரர்கள் வேண்டும் என்பதை சிஎஸ்கே அணி இந்த சீசனில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் 20 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி தான். சமீர் ரிஸ்வி ரெய்னா போன்று விளையாடும் வலது கை பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் வல்லுனர்களால் போற்றப்படுகிறார்.

நடந்து முடிந்த சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடரில் சமீர் ரிஸ்வி முச்சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார். இதனால் ராயுடுவுக்கு பதிலாக சமீர் ரிஸ்வியை பயன்படுத்தி சிஎஸ்கே அணி அவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஷாயிக் ரசித். அண்டர் 19 கிரிக்கெட்டில் ஜெயஸ்வாலுடன் ஷாயிக் ரசித் விளையாடினார்.

தற்போது ஜெய்ஸ்வால் பெரிய ஆளாக மாறி இருக்கிறார். ஆனால் ரஷித்துக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒரு மிகச் சிறந்த பீல்டராக ஷாயிக் ரஷித் விளங்கும் நிலையில் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுத்து அவருடைய திறமையை சிஎஸ்கே அணி பரிசோதிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிடித்திருப்பவர் நிஷாந்த் சிந்து. இவரும் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி புகழ்பெற்றவர். இடது கை சுழற் பந்துவீச்சாளரான இவர் பேட்டிங்கும் நன்றாக செய்வார். இதனால் எதிர்காலத்தில் ஜடேஜாவுக்கு ஒரு மாற்று வீரராக நிசாந்த் சிந்து இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ராஜவர்தன் ஹங்கர்கேகர். குட்டி ஹர்திக் பாண்டியா என்று இவரை ரசிகர்கள் அழைக்கின்றனர். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் அதிரடி காட்டக் கூடியவர். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் களம் இறங்கி சிக்சர்களை அடித்து நொறுக்குவார். இதனால் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை சிஎஸ்கே அணி பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.