ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியல் விபரம் …!

ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியல் விபரம் …!

15வது ஐபிஎல் போட்டித் தொடர் இந்தியாவில் இடம்பெற்றுவருகிறது, இதுவரை 15 ஆவது ஐபிஎல் தொடரில் இரு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன ,இரு சதங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டுக்கான முதலாவது ஐபிஎல் சதத்தை பட்லரும், 2-வது சதத்தை லோகேஸ் ராகுலும் பெற்றுக்கொண்டனர் .

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 6 சதங்கள் பெற்ற கிரிஸ் கெயில்  முதலிடத்திலும், விராட் கோலி 5 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

வாட்சன் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் தலா 4 சதங்களை அடித்து உள்ளனர், இவர்களுக்கு அடுத்த நிலையில் தலா மூன்று சதங்கள் அடித்த வீரர்களாக சஞ்சு சாம்சன், டீ வில்லியேர்ஸ் ,லோகேஷ் ராகுல் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று தனது 100 வது IPL போட்டியில் ஆடும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ராகுல் சதமடித்து அசத்தினார்.