இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் டெல்லி அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .
பான்ட் தலைமையிலான டெல்லி அணியில் விளையாடி வரும் அஸ்வின் நேற்றைய நாளில் சென்னையில் இடம்பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் பின்னர் தான் உடனடியாக வீடு திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், தான் இந்தக் கட்டத்தில் குடும்பத்தினருடன் இருப்பதே சாலச் சிறந்தது என்று கருதுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை விட்டு இடைநடுவே விலகி தான் குடும்பத்தாரோடு சேர்வதாக அஷ்வின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த மாதிரி பல வீரர்கள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டி தொடருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.