ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்படும் சாத்தியம்- தொடரும் சிக்கல்கள் !

14வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் ஆறு மைதானங்களில் இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது .

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும் மரணங்களும் இதற்கான ஐயப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றன.

வீரர்கள் அதிகமான கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடத்தப்படுவதால் அவர்கள் மனோரீதியான அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றனர், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று நள்ளிரவு அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே அவுஸ்ரேலியாவின் அன்ரு டை, இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன்,கோலி தலைமையில் விளையாடும் அவுஸ்ரேலியாவின் ஆடம் ஜாம்பா ,கேன் ரச்சட்சன் ஆகியோரும் விலகுவதாக முடிவெடுத்துள்ளனர்.

வீரர்கள் உயிர்குமிழி (Boi-Bubble) கட்டுப்பாடுகற் கடுமையான மன அழுத்தங்களை அவர்களுக்கு தோற்றுவித்துள்ளது ,ஆகவே இப்படி வீரர்கள் ஒவ்வொருவராக விலக முற்படும் காரணத்தால் சில வேளைகளில் ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் வாய்ப்புகள் உருவாகும் என்றும் கருதப்படுகிறது .

முன்னாள் ஐபிஎல் வீர்ரும் அவுஸ்திரேலிய வீரருமான கில்கிறிஸ்ட் நேற்று முன்தினம் ஐபிஎல் தொடர் தேவைதானா என்ற கேள்வியை எழுப்பி இருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கிரிக்கட் அவுஸ்ரேலியாவும் தங்கள் வீர்ர்கள் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

IPL திருவிழா மே மாதம் 30 ம் திகதிவரை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது .