ஐபிஎல் பைனலில் இப்படி ஒரு ராசியா.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பை ஜெயிக்கப் போவது உறுதி.. ரசிகர்கள் குஷி

ஐபிஎல் பைனலில் இப்படி ஒரு ராசியா.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பை ஜெயிக்கப் போவது உறுதி.. ரசிகர்கள் குஷி

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில், முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிதான் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை கடந்த ஏழு ஆண்டுகளாகப் பலமாக உள்ளது. அதேபோல, இந்த ஆண்டு முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புள்ளிவிவரம் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையையும் வென்று இருக்கிறது. அதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியே ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் என்ற நிலை உள்ளது.

இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதேபோல முதல் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு 2016 ஆம் ஆண்டு முன்னேறி இருந்தது. அந்தப் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

அதேபோல மீண்டும் 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடையுமா, அல்லது கடந்த ஏழு ஆண்டுகளாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் கோப்பையை வெல்வதை ஆர்சிபி-யும் நடைமுறைப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது 2025 ஐபிஎல் பிளே ஆஃபில் எலிமினேட்டர் போட்டி அடுத்து நடைபெற உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். அந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடன் இறுதிப் போட்டியில் மோதும்.

Previous articleஉலகின் எந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஐபிஎல் சாதனை.. 7000 ரன்கள் மற்றும் 300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித்!
Next articleஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி 15 மாதங்கள் மிகச்சிறப்பாக அமைந்து இருக்கிறது