ஐபிஎல் போட்டிகளால் உலகக்கிண்ண தகுதியையே தவறவிடும் நிலையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ,என்ன நடக்கிறது தெரியுமா?

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான வரவிருக்கும் ஒருநாள் தொடர் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் நடுவர்  முடிவை மறு ஆய்வு முறை (DRS) கிடைக்கவில்லை என்பதால் இந்தத் தொடர் இப்போது இருதரப்பு தொடராக மட்டுமே கருதப்படும்.

 இந்தத் தொடருக்காக ஐசிசி அங்கீகரிக்கப்பட்ட DRS செயல்படுத்துனர்களை ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தவறிவிட்டது. குறிப்பாக, அனைத்து ஐசிசி போட்டிகளிலும் DRS ஒரு கட்டாய நிபந்தனை.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் ஆகியவை, முடிவை மறு ஆய்வு முறை (DRS) இல்லாததால், அடுத்த வாரம் ஆரம்பிக்கும் ஒருநாள் தொடரின் நிலையை ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகளிலிருந்து இருதரப்பு தொடராக மாற்ற ஒப்புக்கொண்டன.

இதற்கிடையில், நியூசிலாந்து அணி 2022-23 பருவத்தில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட மீண்டும் பாகிஸ்தான் திரும்பும், அதனால் குறித்த தொடரின் ஒருநாள் போட்டி ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தகுதிக்கு கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“2022-23 பருவத்தில் நியூசிலாந்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் திரும்புவதால், இந்த 50 ஓவர் போட்டிகள் இப்போது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தகுதிக்கு கணக்கிடப்படும் என்று இரு வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன” என்று பிசிபி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி சனிக்கிழமை பாகிஸ்தானில் நரை இறங்கியது. மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு மேலதிகமாக, ஐந்து டி 20 போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடவுள்ளன..

நியூசிலாந்து, பங்களாதேஷுக்கு எதிரான டி 20 தொடரை இழந்ததால்,  பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை சந்திக்க ஆர்வமாக உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, அதேபோன்று நீஷம் போன்ற வீரர்கள் IPL போட்டிகளில் பங்கேற்கும் காரணத்தால் வலுவிழந்த அணியாகவே நியூஸிலாந்து பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது .

ஆக மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கட் போட்டி அட்டவணையையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னணி வீரர்களும் இல்லை, ஐபிஎல் காரணமாக டிஆர்எஸ் செயற்படுத்துபவர்களும் இல்லை ,ஆகவே இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மிகப்பெரும் சங்கடத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதே உண்மையானது.