ஐபிஎல் போட்டிகளின் லக்னோ அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் …!
இந்தியாவின் பிரபல இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தொடரின் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகளுடன் இன்னும் மேலதிகமாக இரண்டு அணிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் புதிய அணிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டன .
இந்த நிலையில் அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தது. இப்போதைய நிலையில் மற்றொரு அணியான லக்னோ அணியின் பயிற்சியாளர் விபரம் வெளியாகியுள்ளது .
முன்னாள் சிம்பாப்வே வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அண்டி பிளவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், லோகேஸ் ராகுல் , சிரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் இந்த அணியின் தலைவராக செயற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.