ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீர் என விடைபெற்றார் கிறிஸ் கெயில்- ஏன் இந்த திடீர் முடிவு ?

ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீர் என விடைபெற்றார் கிறிஸ் கெயில்- ஏன் இந்த திடீர் முடிவு ?

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரும் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரருமான கிறிஸ் கெயில் திடீரென IPL போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்தும்் Bio Bubble முறையில் தொடர்ந்து பயணிக்கும் போது, மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் சிறிது ஓய்வு எடுத்து விட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக உலகக் கிண்ணத்தில் உத்வேகத்தோடு தான் விளையாட விரும்புவதாகவும் கெயில் தெரிவித்தார்.

 

இதனடிப்படையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் இப்போது விடைபெறுவதாகவும் தனக்கு ஒத்துழைப்பாக இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் நிர்வாகத்துக்கும் தன்னுடைய நன்றிகளையும் கெயில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் இன் மெகா ஆக்சன் இடம்பெறவுள்ள நிலையில் அதிகமாக பஞ்சாப் கிங்ஸ் அணி உடனான உறவு கெயிலுக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.