2021 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இரண்டாவது கட்டம் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது நான்கு அணிகளில் கோவிட் -19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு மொத்தம் 31 போட்டிகள் இன்னும் விளையாடப்படவுள்ளன.
ஐபிஎல் 2021 போட்டிகள் அக்டோபர் 15 வரை நடைபெறும், இந்திய கிரிக்கெட் சபை வெளிநாட்டு வீரர்கள் கிடைப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) தலைவர் டேவிட் வைட் ஏற்கனவே முழு காலத்திற்கும் நியூசிலாந்து வீரர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளார், ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வீரர்கள் கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது.
இந்தநிலையில் தென்னாப்பிரிக்கா வீரர்களும் பெரும்பாலும் வருவார்கள் என நம்பப்படுகிறது.
தென் ஆபிரிக்க குழு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன் பயணத்திட்டம் இந்த வார ஆரம்பத்தில் இறுதி செய்யப்பட்டது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளன, இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர் 14 முடிவடையும்.
கோவிட் -19 தொடர்பான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், ஐபிஎல் வீரர்கள் இலங்கையிலிருந்து குமிழிக்கு குமிழி இடமாற்றம் அனுமதிக்கப்படுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
அவ்வாறான நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்தவுடன் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும், அத்தோடு அவர்கள் சில போட்டிகளை இழக்கவும் நேரிடும்.
மறுபுறம், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) ஐபிஎல் வீரர்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் செய்ததைப் போல, போட்டிக்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க இலங்கை சுற்றுப்பயணத்தை இடைநடுவே விட்டு வெளியேற அனுமதிக்கலாம் அனுமதிக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
எவ்வாறாயினும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது தொடர்பில் இதுவரைக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை உறுதிபட அறிவிக்கவில்லை.
ஆயினும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.