ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு _முதல் போட்டியில் சென்னை மும்பை மோதல்..!
ஐபிஎல் போட்டிகளுக்கான இரண்டாம் பகுதிக்கான கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனாவினுடைய தாக்கம் காரணமாக கைவிடப்பட்டது.
இரண்டாம் பகுதி ஆட்டங்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது, அக்டோபர் 15ஆம் திகதி இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.
முன்னதாக முதற்பகுதி ஆட்டங்கள் 29 நிறைவுக்கு வந்த பின்னர், கொரோனா தொற்றுடையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இரண்டாம் பகுதி ஆட்டங்கள் 30 வது ஆட்டத்திலிருந்து இந்த ஆட்டங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 56 Group Stage ஆட்டங்களும் நான்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டங்களும் (Play Off) உள்ளடங்கலாக 60 ஆட்டங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
ஏற்கனவே 29 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.