ஐபிஎல் போட்டிகளுக்கு விழுந்த முதல் அடி -இங்கிலாந்தின் அதிரடி வீரர் திடீர் விலகல் …!
பதினைந்தாவது ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ,மே மாதம் 29ஆம் திகதி வரைக்கும் 70 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீர் விலகலை இங்கிலாந்து வீரர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜேசன் ராய் Bio Bubble சிக்கல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவரது திடீர் விலகல் ஐபிஎல் தொடருக்கு முதல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது .
புதிய அணியான குஜராத் இதுவரை இவருக்கு பதிலாக மாற்று வீரரை பெயரிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.