ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேன் பட்டியல்..

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேன் பட்டியல்.. முதல் போட்டியிலேயே பதிவான ரெக்கார்டு

5 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்களை அடித்த வீரர்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 175 ரன்கள் குவித்ததே இன்று வரை ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கிய நாள் அன்று, ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அடித்த 158 ரன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அதிகபட்ச ஸ்கோர்களை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

கிறிஸ் கெய்ல் – 175* (66 பந்துகள்) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. புனே வாரியர்ஸ் இந்தியா, 23 ஏப்ரல் 2013

பிரெண்டன் மெக்கல்லம் – 158* (73 பந்துகள்) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 18 ஏப்ரல் 2008

குயின்டன் டி காக் – 140* (70 பந்துகள்) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 18 மே 2022

ஏபி டி வில்லியர்ஸ் – 133* (59 பந்துகள்) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. மும்பை இந்தியன்ஸ், 10 மே 2015

கே.எல். ராகுல் – 132* (69 பந்துகள்) – கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 24 செப்டம்பர் 2020

ஏபி டி வில்லியர்ஸ் – 129* (52 பந்துகள்) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. குஜராத் லயன்ஸ், 14 மே 2016

சுப்மன் கில் – 129 (60 பந்துகள்) – குஜராத் டைட்டன்ஸ் vs. மும்பை இந்தியன்ஸ், 26 மே 2023

கிறிஸ் கெய்ல் – 128* (62 பந்துகள்) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. டெல்லி டேர்டெவில்ஸ், 17 மே 2012

ரிஷப் பண்ட் – 128* (63 பந்துகள்) – டெல்லி டேர்டெவில்ஸ் vs. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 10 மே 2018

முரளி விஜய் – 127 (56 பந்துகள்) – சென்னை சூப்பர் கிங்ஸ் vs. ராஜஸ்தான் ராயல்ஸ், 3 ஏப்ரல் 2010

டேவிட் வார்னர் – 126 (59 பந்துகள்) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 30 ஏப்ரல் 2017

மார்கஸ் ஸ்டோய்னிஸ் – 124* (63 பந்துகள்) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs. சென்னை சூப்பர் கிங்ஸ், 23 ஏப்ரல் 2024

ஜோஸ் பட்லர் – 124 (64 பந்துகள்) – ராஜஸ்தான் ராயல்ஸ் vs. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2 மே 2021

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 124 (62 பந்துகள்) – ராஜஸ்தான் ராயல்ஸ் vs. மும்பை இந்தியன்ஸ், 30 ஏப்ரல் 2023

விரேந்தர் சேவாக் – 122 (58 பந்துகள்) – கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs. சென்னை சூப்பர் கிங்ஸ், 30 மே 2014

Previous article“எனக்கு டெஸ்ட் போட்டி ஆடணும்னு ஆசை ஆனா முடியாது ஏனென்றால்”.. வருண் சக்கரவர்த்தி ஓபன் டாக்
Next articleராகுல் இல்லை..டெல்லி அணியின் புதிய துணைகேப்டனாக பிரபல ஆர்சிபி, சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு