‘ஐபிஎல் வின்னர்’…இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அமெரிக்க அணிக்கு செல்ல திட்டம்…பிசிசிஐ

‘ஐபிஎல் வின்னர்’…இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அமெரிக்க அணிக்கு செல்ல திட்டம்…பிசிசிஐ

ஐபிஎல் வின்னர் அமெரிக்காவுக்கு சென்று கிரிக்கெட் விளையாட முடிவு செய்துள்ளார்.
2016ஆம் ஆண்டில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிபுல் ஷர்மா, உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

ஐபிஎலில் மொத்தம் 17 போட்டிகளில் 33 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். கடைசி விக்கெட்டாக, 2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏபி டிவிலியர்ஸைதான் வீழ்த்தினார்.

அதன்பிறகு ஹைதராபாத் அணியில் நீடித்தாலும், XI அணியில் அவ்வபோதுதான் வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், 2018ஆம் ஆண்டோடு ஹைதராபாத் அணி, இவரை கழற்றிவிட்டது. அதன்பிறகு எந்த அணியும் இவரை வாங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதுவரை மொத்தம் 59 உள்ளூர் டெஸ்ட்களில் 3012 ரன்களும், 126 விக்கெட்களையும் வீழ்த்தி, ஆல்-ரவுண்டராக தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அதேபோல்
105 டி20 போட்டிகளில் 1203 ரன்களும், 84 விக்கெட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.
இருப்பினும், அவருக்கு இந்திய ஏ அணியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த இவர், தற்போது இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, அமெரிக்க அணிக்காக விளையாடச் சென்றுள்ளார். இதற்குமுன், உன்முக்த் சந்த், ஸ்மித் படேல், ஹர்மீட் சிங் போன்ற திறமையானவர்களும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகி, அமெரிக்க அணிக்காக லீக் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டனர். இப்படி தொடர்ந்து வீரர்கள் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகி வருவதால், பிசிசிஐ அதிர்ச்சியடைந்துள்ளது.

#Abdh