ஐபிஎல் விளையாடப் போகும் முதல் சிங்கப்பூர் வீரர் _RCB க்காக கோலி கொடுத்து அரிய வாய்ப்பு ..!
14வது ஐபிஎல் போட்டி தொடரின் 2 ம் கட்ட போட்டிகளில் விளையாடுவதற்கான வீரர்கள் இப்போது இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே முதல்கட்ட போட்டிகளில் ஒப்பந்தமாகிய சில வீரர்கள் சொந்த காரணங்களால் இரண்டாவது கட்ட ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இணைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று (21) மாலையில் ஆர்சிபி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இலங்கையின் ஹசரங்க, துஸ்மந்த சமீர ஆகியோரோடு சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் எனும் 25 வயதான வீரர் ஒருவரும் ஆர்சிபி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை எல்லோருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.
அவுஸ்திரேலிய, தென் ஆபிரிக்க, மேற்கிந்திய தீவுகள் இப்படியான நாடுகளிலிருந்து அதிக வீரர்கள் IPL ஆடுவதை அறிந்திருக்கின்றோம், ஆனால் சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டில் இருந்து ஐபிஎல்லில் இணைத்துக்கொள்ளப்படும் அளவிற்கு அப்படி யார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
டிம் டேவிட், வயது 25 , உயரம் 6’5″
இவருடைய தந்தையார் ஒரு பொறியியலாளர், சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக இவர் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 1997 ல் ஆடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஐபிஎல் அறிமுகமாகும் டிம் டேவிட், சிங்கப்பூர் கடவுச்சீட்டை கொண்டிருக்கும் ஒருவராக இருக்கிறார், ஆனால் பின்னாட்களில் இவருடைய குடும்பம் அவுஸ்திரேலியாவிற்கு குடிபுயர்ந்து இருந்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன .
25 வயதாகும் டேவிட் 64 மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் 77 சிக்சர்களை விளாசியுள்ளார்.
இது மாத்திரமல்லாமல் ட்வென்டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இவருடைய Strike Rate 158 ஆக காணப்படுகிறது, 14 சர்வதேச ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் 558 ஓட்டங்களை விிளாசியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிரபலமான பிக்பாஸ் லீக் போட்டிகளில் ஹோபர்ட் ஹரிக்கேனஸ் மற்றும் Perth Scorches அணிகளுக்காகவும் இந்த டிம் டேவிட் விளையாடியிருக்கிறார், இது மாத்திரமல்லாமல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் டிம் டேவிட், கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் வாய்ப்பு பெறுகிறாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கோலி படை டிம் டேவிட்டை பிளேயிங் XI இல் இணைத்து சந்தர்ப்பம் கொடுக்கிறதா என ஆவலோடு காத்திருப்போம்.