ஐபிஎல் விளையாடும் நியூசிலாந்து வீரர்களை உறுதிப்படுத்தியது நியூசிலாந்து கிரிக்கெட் சபை..!

ஐபிஎல் விளையாடும் நியூசிலாந்து வீரர்களை உறுதிப்படுத்தியது நியூசிலாந்து கிரிக்கெட் சபை..!

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இரண்டாவது அத்தியாயம் வருகின்ற செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக மொத்தம் 30 IPL ஆட்டங்கள் நிறைவுக்கு வந்த நிலையில், கொரோனா நெருக்கடி காரணமாக மீதமான போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே மீதமான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏராளமான வெளிநாட்டு வீரர்களுக்கு IPLல் இரண்டாம் பகுதியில் விளையாடுவதற்கு சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் வீரர்களை அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

 இந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட்  வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

சன் ரைசேர்ஸ் அணித் தலைவர் கேன் வில்லியம்சன், மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரென்ட் போல்ட்,  அதேபோன்று ஜேம்ஸ் நீசம் ஆகியோரோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கும் லொக்கி பேர்கூசன் ஆகிய நான்கு வீர்ர்களும் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அத்தியாயத்தில் விளையாடுவார்கள் என்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.