ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக் தான் 360 டிகிரி வீரர் – ஏபிடி வில்லியர்ஸ்!

ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக் தான் 360 டிகிரி வீரர் – ஏபிடி வில்லியர்ஸ்!

தினேஷ் கார்த்திக்கால், மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாக டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு எப்படியும் கோப்பையை வென்றுவிடும் என்பது போன்ற ஃபார்மில் ஆர்சிபி அணி இருந்து வருகிறது.
இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலிலும் டாப் 4 இடங்களில் உள்ளது.

ஆர்சிபியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் தினேஷ் கார்த்திக் தான். தற்போது வரை ஆர்சிபியின் டாப் ரன் ஸ்கோரராக தினேஷ் கார்த்திக் தான் 197 ரன்களுடன் இருக்கிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 209 ஆகும். 6 போட்டிகளில் 2 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுவிட்டதால், அடுத்த ஃபினிஷர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை பார்த்து டிவில்லியர்ஸ் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் தற்போது தனது வாழ்நாளில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அது எப்படி வந்தது என எனக்கு புரியவில்லை. சில ஆண்டுகளாக பெரியளவில் கிரிக்கெட் விளையாடவில்லை, கமெண்டேட்டராக களமிறங்கிவிட்டார். எனினும் தற்போது இப்படி அதிரடி காட்டுகிறார்.

அவரை பார்க்கும்போது 360 டிகிரி வீரர் போன்று தெரிகிறது. அவரின் ஆட்டத்தை பார்த்தால், எனக்கு மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இக்கட்டான சூழலில் அனுபவம் கைக்கொடுக்கிறது.

அவரின் ஃபார்ம் இதே போன்று இருந்தால், ஆர்சிபி புதிய உச்சத்தை எட்டும்.
கடைசியாக நான் தினேஷை பார்த்த போது லண்டனில் கமெண்டேட்டராக இருந்தார். அவரின் கிரிக்கெட் எதிர்காலமே முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால் அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுவும் இக்கட்டான சூழலை கையாள்வதில் தான் கிங் என நிரூபித்துக் காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

#Abdh