ஐபிஎல் 2022: பிப்ரவரியில் மெகா ஏலம் எப்போது- புதிய தகவல் ..!
ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இதனால் ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த ஏலத்தை பெங்களூருவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் மெகா ஏலம் குறித்து பெரும்பாலான அணி உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
ஒரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒன்றாக இணைந்து விளையாடவே சில ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.