ஐபிஎல் 2022: KKR தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்துடன் வாக்குவாதம் புரியும் ஷ்ரேயாஸ் ஐயர் (வைரல் வீடியோ)
கொல்கத்தா அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டியில் 218 ரன்கள் என்ற துரத்தலில் நேற்று 7 ஓட்டங்களால் தோற்றுப்போனது.
போட்டியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்த பிறகு, KKR அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பயிற்சியாளருடன் சில கருத்து மோதலில் ஈடுபட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவரது துணிச்சலான 51 பந்துகளில் 85 ரன்களும் வீணாகிவிட்டன, தோல்விக்குப் பிறகு அவர் மகிழ்ச்சியடையவில்லை.டக் அவுட்டில் அமர்ந்திருந்த தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்திடம் அவர் ஏதோ குறை கூறிக் கொண்டிருந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தனது பேட் மற்றும் ஹெல்மெட்டை கைகளில் வைத்திருந்தார், மேலும் மைதானத்தில் சில நடவடிக்கைகள் குறித்து மெக்கல்லத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.
புரிந்துகொள்ளத்தக்க வகையில், KKR பயிற்சியாளரும் அந்த நேரத்தில் எதுவும் மறுப்பு சொல்லவில்லை, இத்தகைய நெருக்கமான ஆட்டத்தை இழந்த பிறகு உணர்ச்சிகள் மேலெழும்புகின்ற நிகழ்வுகள் தவிர்க்கமுடியதவைதான்.
— Diving Slip (@SlipDiving) April 18, 2022