ஒய்வு தொடர்பில் முடிவை அறிவித்த லியோனல் மெஸ்ஸி …!

ஒய்வு தொடர்பில் முடிவை அறிவித்த லியோனல் மெஸ்ஸி …!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி தன்னுடைய ஓய்வு தொடர்பான அறிவித்தலை திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்டாரில் ஆரம்பமாகவுள்ள கால்பந்து உலகக் கிண்ணத் தொடர் தான் தன்னுடைய இறுதி உலகக்கிண்ணத் தொடர் என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸி விளையாடும் 5 ஆவது உலகக் கிண்ணத் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது.

இதுவரைக்கும் உலகக்கிண்ணம் எதனையும் வெற்றி கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மெஸ்ஸி தன்னுடைய இறுதி உலகக்கிண்ண தொடரில் அணிக்கு கிண்ணத்தை வென்றுகொடுப்பாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இந்த உலக கிண்ண தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு தடவை மெஸ்ஸியை உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நாங்கள் காணமுடியாது என்பது கவலைதான் .