ஒரு சிக்ஸரை கூட கொடுக்காத பந்துவீச்சாளர்களும் இருக்கின்றார்களா?

கிரிக்கெட் வரலாற்றில் 5000இற்கும் மேற்பட்ட பந்துகளை வீசி ஒரு சிக்ஸரைகூட அடிக்க விடாமல் பாதுகாத்த சில அதிரடி பந்துவீச்சாளர்கள் உள்ளனர்..

அவர்களில் டொப் 3 பந்துவீச்சாளர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1.மில்லர்:

அவுஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கீத் மில்லர், 1946 முதல் 1959 வரை சர்வதேச கிரிக்கெட்டில், உள்ளூர் கிரிக்கெட்களில் விளையாடியிருக்கிறார். இதில் மொத்தம் 10,461 பந்துகளை வீசியிருக்கிறார். இருப்பினும், ஒருமுறைகூட சிக்ஸர் அடிக்கவிட்டது கிடையாது.

2.நீல் ஹாக்:

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் ஹாக், 1963 முதல் 1968 வரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டி, 145 முதல்தர போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 6,987 பந்துகளை வீசி, ஒரு சிக்ஸரைகூட அடிக்கவிட்டது கிடையாது.

3.நாசர்:

பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முடாசர் நாசர், 1976 முதல் 1989ஆம் ஆண்டுவரை 76 டெஸ்ட், 112 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5876 பந்துகளை வீசியிருக்கிறார். இதில், ஒரு பந்தில்கூட சிக்ஸர் அடிக்கவிட்டது கிடையாது.