ஒரு நாயகன் வாரான்- இந்தியர்களை நடுநடுங்க வைத்த நசீம் ஷா ( வீடியோவைப் பாருங்கள்)

90s ல இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச்ல பேட்ஸ்மேன் ஆதிக்கத்தை விட பவுலர்ஸ் ஆதிக்கம் தான் ஜாஸ்தியா இருக்கும்.

ஒன்னு பாஸ்ட் பவுலிங் லைன்னப் விக்கெட்டுகளை குவிக்கும் இல்லயா சக்லைன் முஸ்டாக் விக்கெட்டுகளை குவிப்பார் .

பாக்கிஸ்தான் பவுலிங் லைன் அப் பயரா இருக்கும் வாசிம் அக்ரம், வாக்கர் யுனிஸ் , சோயிப் அக்தர் , அப்துல் ரசாக், சக்லைன் , அப்ரிதின்னு லைன் கட்டி பவுலிங் போட வந்துட்டே இருப்பாங்க. இந்த கூட்டத்தை சமாளிச்சு ரன் எடுக்குறதே பெரிய குதிரை கொம்பு தான் அப்ப எல்லாம் .

நேத்தும் மேட்ச்ம் கிட்டதட்ட அப்படி தான் இருந்தது T20 ன்னாலே 160+ ஸ்கோர்கள் பார்த்து பார்த்து பழகி போன கண்களுக்கு கொஞ்சம் லோ ஸ்கோரிங் த்ரில்லர் மேட்ச் வரபிரசாதம் தான் அதுக்கு பிட்ச் கொஞ்சம் ட்ரிக்கியா அமையனும்.

அந்த பிட்ச்ல வெயிட் பண்ணி கால்களை பின் நகர்த்தி பேக்புட்ல எடுக்குற ரன்களுக்கு மதிப்பு எப்பவும் அதிகம்.

ஷாகின் அப்ரிதி இல்லன்னா என்ன அவர் இடத்தை நான் நிரப்புறேன்னு வந்து நேத்து ஸ்விங்க்ல மிரட்டிட்டான் இந்த 19 வயசு சின்ன பையன்.

விராட் கோலி இந்த பையன் அவுட் ஸ்விங்ல தப்பிச்சது எல்லாம் லக் தான் இல்லன்னா முதல் ஓவர்லயே நமக்கு செக் மேட் ஆயிருக்கும்.

முதல் ஓவர்லயே
* ராகுலை போல்ட் ஆக்குனது,
* கோலிக்கு இரண்டாவது ஸ்லிப்ல பொறி வச்சது
* ஒவரோட கடைசி பால்ல ரோகித்தை 4th stump close lineல போட்டு ஆட்டம் காண வச்சது என மொத்த பிரஷரையும் நம்ம டீம் மேல திருப்பி விட்டார்.

15வது ஒவர்ல வந்து சூர்யாவுக்கு ஸ்டெம்ப்பை பறக்க விட்டதுன்னு ஸ்பெல்ல பொறி பறந்தாலும்

18வது ஒவர்ல பையன் பண்ணது தான் பல வருசத்துக்கு நின்னு பேச போகுது , Cramp ல கால் பிடிச்சப்ப கூட அந்த ஒவர்ல ஜடேஜாவுக்கு முதல்ல கொடுத்த பிரஷர் எல்லாம் மலைக்க வச்சுடுச்சு .

 

2,3,4 தொடர்ந்து டாட் ஆகி 5வது பால்ல பவுலிங் போட முடியாமல் போட்டு சிக்ஸ் விட்டாலும் அடுத்த பாலே சுதாரிச்சு பவுன்ஸ் போட்டு மற்றொரு டாட்டை கிரியேட் பண்ணது தான் Top clas notch .

நேத்து போட்டியை இந்தியா ஜெயிச்சிருக்கலாம் ஆனால் எல்லார் இதயத்தையும் இந்த பையன் ஜெயிச்சுட்டான் நசிம் ஷா ❤️ .

#அய்யப்பன்

video ?