ஒரு பக்கத்தில் திருமணம் – மறுபக்கம் என்ன நடந்தது ?
TV Showroom களுக்கு வெளியே அல்லது ஒரு முடிதிருத்தும் கடைக்குள் , அலுவலகங்களில் என்று எல்லா இடங்களிலும் இந்தியா கிரிக்கெட் விளையாடும் தருணத்தில் நிச்சயமாக அனைவரும் தங்கள் அன்றாட வேலைகளை மறந்து போட்டியை மிகுந்த தீவிரத்துடன் பார்த்து ரசிப்பார்கள்.
கிரிக்கெட் விளையாட்டிற்கான வெறி இந்தியர்களிடையே மிகவும் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அவர்கள் விளையாட்டை மதம் போல நடத்துகிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா தொடர் நடைபெற்ற தருணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சில ரசிகர்கள் தங்கள் திருமண மண்டபத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டின் நேரடி ஒளிபரப்பை நேரடியாக ஒளிபரப்பினர்.
ஒருபக்கத்தில் திருமணம், மறுபக்கத்தில் கிரிக்கெட் போட்டி.
கிரிக்கெட் என்பது இப்போது எல்லோரது உணர்விலும் கலந்துவிட்ட ஒன்றாக மாறிப்போனது என்பதற்கு இந்த திருமண நிகழ்வும் சான்று பகர்கின்றது எனலாம்.






