ஒரு பந்து- இரு ஆட்டமிழப்புக்கள், ஏமாற்றிய தெவுதுட் படிக்கல்..! (வீடியோ இணைப்பு)

ஒரு பந்து- இரு ஆட்டமிழப்புக்கள், ஏமாற்றிய தெவுதுட் படிக்கல்..! (வீடியோ இணைப்பு)

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான T20 போட்டி தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.

2-1 என இலங்கையின் இளம் அணி அபாரமான வெற்றியை இந்தியாவுக்கு எதிராக ஈட்டிக் கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தெவுதுட் படிக்கல் ஒரு வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார்.

இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சை படிக்கல் எதிர்கொண்டபோது, பந்து கால்காப்பில் பட்டதனால் இலங்கை வீரர்கள் LBW முறையில் ஆட்டமிழப்பைக் கோரினர், அந்தநேரத்தில் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனித்திராத படிக்கல் ஒட்டமொன்றைப் பெற முனைந்தார்.

ஓட்டம் பெற முனைத்தவரைய எதிர்முனையில் இருந்த கெயிக்வாட் திருப்பியனுப்ப மீண்டும் கிரீசுக்குள் திரும்புவதற்கு இடையில் ரன் அபௌ முறைமூலமாகவும் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நாடகத்துக்கிடையில் LBW முறைமூல ஆட்டமிழப்பை நடுவர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தத்தில் படிக்கல் ஒரே பந்தில் LBW, ரன் அவுட் ஆகிய இரு சந்தர்ப்பங்கள் மூலமாகவும் பறிகொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் Scorecard படிக்கல் ரமேஷ் மெண்டிஸ் பந்தில் LBW முறைமூலமாகவே ஆட்டமிழந்ததாக காண்பித்தமை கவனிக்கத்தக்க சுவாரஸ்ய விடயமாகும்.

வீடியோ இணைப்பு.

Padikkal RCB IPL2021