ஒரு மில்லியன் சீருடைகள் விற்று தீர்ந்தன, மெஸ்ஸிக்கு ஊதியமாக கொடுத்த பணத்தை சீருடைகள் மூலம் பெற்ற PSG..!

ஒரு மில்லியன் சீருடைகள் விற்று தீர்ந்தன, மெஸ்ஸிக்கு ஊதியமாக கொடுத்த பணத்தை சீருடைகள் மூலம் பெற்ற PSG..!

அண்மையில் கால்பந்து உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது  கால்பந்து நட்சத்திரம் லியனல் மெஸ்ஸி PSG கழகத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டமையாகும்.

பார்சிலோனா கழகத்திற்காக 17 சீசன்களாக விளையாடிய மெஸ்ஸி, அந்த கழகத்தில் இருந்து விடைபெற்று PSG கழகத்திற்கு இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் .

ஆண்டுக்கு 35 மில்லியன் யூரோக்கள் இவருக்கு ஊதியமாக வழங்கப்படவுள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கான ஊதியத் தொகை மொத்தமாக 70 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் மெஸ்ஸியின்  பிஎஸ்சி கழகம் அவருடைய 30 ம் இலக்க சீருடைகளை அச்சிட்டு விற்பனை செய்ததன் மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீருடைகள் சந்தையில் வெற்றிகரமாக விற்கப்பட்டிருக்கின்றன.

இணையத்தின் மூலமாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட PSG கழக சீருடைகள் விற்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன, ஆக மொத்தத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸிக்கு வழங்கப்படுகின்ற தொகை 70 மில்லியன் யூரோக்கள் , ஆனால் 24 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீருடைகள் விற்றிருப்பதன் மூலமாக பிஎஸ்சி கழகம் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட யூரோக்களை வருவாயை ஈட்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகில் ஒரு வீரரின் சீருடை இவ்வளவு வேகமாக அதிக சீருடைகள் விற்கப்பட்டமை என்பதும் சாதனையே..!