ஒரே நேரத்தில் இரு T20 லீக்கில்்விளையாடுகிறார் – கிரிஸ் லின் க்கு அனுமதி வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை..!

பிக் பாஷ் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் கிறிஸ் லின், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் இந்த சீசனில் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர் அடிலெய்டு அணியுடன் ஆரம்ப சுற்றில் 14 ஆட்டங்களில் 11 ஆட்டங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த 11 போட்டிகளில் விளையாடிய பிறகு, கிறிஸ் லின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ILT20 போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒப்புதலுக்காக கிறிஸ் லின் காத்திருந்த நிலையில், கிறிஸ் லின்னுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு பிக்பாஷ் லீக்கில், பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் லின், அந்த சீசனில் 215 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் காரணமாக மற்றுமொரு வீரரின் மீது கவனம் செலுத்த பிரிஸ்பேன் அணி தீர்மானித்துள்ளது இதன் காரணமாக அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

 

கிறிஸ் லின் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிக் பாஷ் போட்டியில் இருந்து விடுவிக்க தயாராக இருப்பதாகவும் அதன் பின்னர் அவர் ILT20 போட்டியில் விளையாட முடியும் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ILT20 ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது.