ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்- கரீபியன் பிரீமியர் லீக்கில் கலக்கிய அண்ட்ரே ரசல் ..!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்- கரீபியன் பிரீமியர் லீக்கில் கலக்கிய அண்ட்ரே ரசல் ..!

மேற்கிந்தியத் தீவுகள் இடம்பெற்றுவரும் CPL கிரிக்கெட் போட்டி தொடரில் மிக முக்கியமான போட்டி ஒன்று இடம்பெற்றது.

ஜமேக்கா தலவாஸ் , செயின்ட் லூசிய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் ஜமைக்கா தலவஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரசல் CPL சரித்திரத்தின் புதிய சாதனை படைத்துள்ளார் .

மொத்தமாக 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் அடங்கலாக வெறுமனே 14 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் ,அதிவேகமான அரைச்சதம் எனும் சாதனையை ரசல் தனதாக்கினார்.

 

இது மாத்திரமல்லாமல் துடுப்பெடுத்தாடிய ஜமேக்கா அணி  மொத்தமாக 6 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது ,256 துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 135 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழந்தது.

இதனடிப்படையில் ஜமேக்கா அணி 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது. CPL சரித்திரத்தில் மிக அதிகமான ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாகவும் இந்த வெற்றியை பதிவு செய்யப்பட்டது.

ஒரே போட்டியில் ஜமைக்கா அணி 2 கரீபியன் பிரீமியர் லீக்  சாதனைகள்  படைத்துள்ளது.