ஒற்றைப் பந்தில் கோஹ்லியின் கதையை முடித்த ஆண்டர்சன்..! (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நொட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் முதல் நாளில் ஆடிய இங்கிலாந்து 183 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு ஆடிவரும் இந்திய அணி ஆரம்ப இணைப்பாட்டம் 97 ஓட்டங்களாக இருந்தாலும், அதன்பின்னர் வந்த புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார்.

அதிலும் புஜாரா, கோஹ்லி ஆகியோரை ஆண்டர்சன் அடுத்ததடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார்.
விசேடமாக ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி தன் விக்கெட்டை (Golden Duck) பறிகொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு.