ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘அம்மா’க்களை கொண்டாடுவோம்…!

#Olympics

ஒலிம்பிக் போட்டிகளில் 100m, 200m ஓட்டம்.

தடகள போட்டிகளின் 100m, 200m ஓட்டத்தை பல ஆண்டுகளாக தாங்கள் தான் பதக்கம் வெல்பவர்கள் என்ற ஒரு இறுமாப்புடன் இருந்தவர்கள் USA இனர்,100m, 200m என்ன உங்க வீட்டு சொத்தா?? என்று அடிச்சு பிடிச்சு மேல வந்து கொண்டு இருக்கிறார்கள் Jamaica.

1896 ஆம் ஆண்டு தொடக்கம் 100m ஓட்டமும், 1900 முதல் 200m ஓட்டம் ஆரம்பமானதில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை USA இன் ஆதிக்கம் இருந்தது தங்கம், வெள்ளி பதக்கங்கள் அதிகமாக பெற்று வந்திருந்தார்கள் அதுவும் ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமான போட்டிகளிலும் அதே நிலை தான் இருந்தது. 2008 இன் பின் வந்த காலங்களில் இந்த வரலாறு மாறியது. ஆம் ஜமைக்கா நாட்டவர் ஆதிக்கம் 100m, 200m பக்கம் வந்தது. உணவுக்காக ஓடியவனும், இரும்பு எடுத்து போகும் போது போலீசில் பிடிபடாது தப்புவதற்கும் ஓடியவர்களின் ஓட்டம் சர்வதேச ஒலிம்பிக் திடலில் ஓட தொடங்கி சாதனைகளாக மாறியது.

100m போட்டியில் 1896 தொடக்கம் 2004 வரை 25 தடவைகள் இடம்பெற்ற போட்டிகளில் 1980 இல் மாஸ்கோ இல் இடம்பெற்ற போட்டிகளில் பங்கு கொள்ளவில்லை 2004 வரையான கால பகுதியில் 24 முறை பங்கு பற்றிய USA அணியினர்
100m ஆண்கள் பிரிவில் 16 தங்க பதக்கங்களும், 14 வெள்ளி பதக்கங்களும், 9 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது.

அதே போல 100m பெண்கள் பிரிவில் 1928 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 வரையான காலப் பகுதியில்
9 தங்க பதக்கங்களும், 7 வெள்ளி பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது.

மொத்தமாக
25 தங்கம், 21 வெள்ளி, 11 வெண்கலம் வென்றுள்ளார் 100m போட்டியில் USA அணியினர்.

200m போட்டியில் 1900 தொடக்கம் 2004 வரை

USA ஆண்கள்

17 தங்கம், 18 வெள்ளி, 11 வெண்கலம் பெற்றுள்ளார்கள்

200m பெண்கள் போட்டியில் 1948 தொடக்கம் 2004 வரையான காலப் பகுதியில்
6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார்கள்.

2004 வரை 100m, 200m கொடி கட்டி பறந்த USA அணியை ஜமைக்காவினர் நாட்டவர்கள் 100m, 200m ஐ தங்கள் வசப்படுத்தினர்.

2008, 2012, 2016 காலப்பகுதியில்
. 100m இல் ஜமைக்கா வீரர் Usain Bolt தங்கம் வென்று இருந்தார் மூன்று ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும்.

2008 இல் டிரினாடன் 1 வெள்ளி, USA க்கு , 1 வெண்கலம் கிடைத்தது

2012 இல் வெள்ளி ஜமைக்கா வுக்கும், வெண்கலம் USA கும்

2016 இல் வெள்ளி USA, வெண்கலம் கனடாக்கும் கிடைத்தது.

. 200m இலும் ஜமைக்கா வீரர் Usain Bolt தங்கம் வென்று இருந்தார் மூன்று ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும்.

இந்த 3 தடவைகளிலும் ஒரு வெள்ளி, வெண்கலம் USA இற்கும், ஒரு வெள்ளி வெண்கலம்
ஜமைக்காவுககும், கனடா ஒரு வெள்ளியும், பிரான்ஸ் ஒரு வெண்கலம் பெற்று இருந்தது.

இதன் மூலம் ஆண்கள் பிரிவில் 100m, 200m இல் தங்கம் ஜமைக்கா வசமானது…

, 100m பெண்கள் பிரிவில்
2008, 2012 களில் ஜமைக்கா Shelly-Ann Fraser-Pryce வசமானது தங்கப்பதக்கம்.
2016, 2020 களில் ஜமைக்கா Elaine Thompson வசமானது தங்கப்பதக்கம்.

GRIFFITH JOYNER என்னும் USA நாட்டை சேர்ந்த வீராங்கனை 24/09/1988 இல் ஒலிம்பிக் போட்டிகளில் 100m தூரத்தை 10.62 செக்கன்களில் ஓடி ஒலிம்பிக் சாதனை படைத்து இருந்தார் அதனை 2020 இற்கான போட்டியில் Elaine Thompson அவர்கள் 31/07/2021 இல் 100m ஓட்ட தூரத்தை 33 வருடங்களின் பின் 10.61 செக்கன் கணக்கில் ஓடி முடித்ததன் மூலம் புதிய ஒலிம்பிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

, 200m பெண்கள் பிரிவு போட்டியில் 2004, 2008 களில் ஜமைக்கா Veronica Campbell வசமானது தங்க பதக்கம்.
2012 USA இன் Allyson Felix இடம் தங்கப்பதக்கம்
2016 இல் ஜமைக்கா Elaine Thompson வசமானது தங்கப்பதக்கம்.

எதிர்வரும் காலங்களில் யார்? எந்த நாட்டவர்? 100m, 200m ஐ தம்வசம் வைத்திருக்கபோரார்கள் என்பதை பார்ப்போம்..

• இம்முறை தாயாகிய பின்னும் Allyson Felix 400m போட்டியிலும், Fraser-Pryce 100m இல் பங்குபற்றி வெள்ளி பதக்கத்தையும் பெற்ற இவர் 200m, 4×100m இலும் பங்குபற்ற உள்ளார்.

உசைன் போல்ட் ஐ கொண்டாடும் நாம் இவ்வாறான அம்மாக்களையும் அவர்கள் சாதனைகளையும் கொண்டாடுவோம்.

#சந்துரு வரதராசன்