ஒலிம்பிக் கால்பந்து -தங்கத்தை சுவீகரித்த பிரேசில் அணி..!
டோக்கியோவில் இடம்பெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து ஆடவர் பிரிவு போட்டியில் பிரேசில் கால்பந்தாட்ட அணி மீண்டும் ஒரு தடவை தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே தங்கப்பதக்கத்தை சுவீகரித்த பிரேசில் அணி ,இம்முறையும் தங்கப்பதக்கத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அணியை பொறுத்தவரையில் ஸ்பெயின் உடனான இன்றைய இறுதிப்போட்டியில் 2 -1 என்ற கோல்கள் அடிப்படையில் இந்த தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.