ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றது பிரபலமான பிரேசில் அணி ..!

ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றது பிரபலமான பிரேசில் அணி ..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று இடம்பெற்ற முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியைத் தழுவியது.

இம்முறை கிண்ணத்தை வெல்லவல்ல அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் கால்பந்தாட்ட அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

ஐந்தாவது தடவையாக ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் மார்த்தா முதல்முறையாக கிண்ணத்தை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள்  எதிர்பார்த்தாலும் ரசிகர்களின் கனவு நனவாகவில்லை.

Brazil football matra

நேற்று கனடா அணியுடனான போட்டியில் அவர்களுக்கான வழங்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை ,பின்னர் மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 3 -4 எனும் அடிப்படையில் பிரேசில் தோல்வியை தழுவியுள்ளது.

அரை இறுதியில் கனடா அமெரிக்காவை சந்திக்கவுள்ளது.

Brazil women’s football Canada women’s football Brazil women’s football Vs Canada matra