ஒலிம்பிக் தொடர்பில் தன்னுடைய அதிரடி முடிவை அறிவித்த செரினா வில்லியம்ஸ் கவலைப்படும் ரசிகர்கள் ..!

ஒலிம்பிக் தொடர்பில் தன்னுடைய அதிரடி முடிவை அறிவித்த செரினா வில்லியம்ஸ் கவலைப்படும் ரசிகர்கள் ..!

அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் நட்சத்திரமும் , ஏராளமான கிராண்ஸ்லாம் மகுடங்களையும் வெற்றிகொண்ட முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் ஒலிம்பிக் தொடர்பில் தன்னுடைய அதிரடியான முடிவை அறிவித்துள்ளார்..

அடுத்த மாதம் ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று செரினா வில்லியம்ஸ் இன்று அறிவித்தார் .

 

விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகிக்கொண்டிருக்கும் செரினா வில்லியம்ஸ், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒரு நேர்காணலில் இதனை தெரிவித்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.

23 கிராண்ட்ஸ்லாம் வெற்றி கொண்டு 24வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்துள்ளது.