ஒலிம்பிக் போட்டிகளில் கால்பதிக்கும் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரரின் சகோதரர்- யார் தெரியுமா..?

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரரான சமிக்க கருணாரத்னவின் சகோதரனான நிலுக்க கருணாரத்ன ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

இலங்கையின் பிரபல பேட்மிண்டன் சாம்பியனான கருணாரத்ன ,டோக்கியோவில் அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறார்.

 

இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ஆறாவது வீரராக திகழ்கிறார் நிலுக்க கருணாரத்ன.

பங்களாதேசில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில் அறிமுகம் மேற்கொண்ட ரோயல் கல்லூரியின் 24 வயதான சகலதுறை வீரர் சமிக்க கருணாரத்னவின் சகோதரரே நிலுக்க என்பதும் குறிப்பிடத்தக்கது.