ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் – நடவடிக்கைகளை முன்னெடுத்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை..!
கிரிக்கெட் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறாத என்கின்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற இருக்கும் 34வது ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் இணைத்துக் கொள்வதற்கான ஆயத்தங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை மேற்கொண்டுள்ளது.
இதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு அது தொடர்பான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
ஆசிய, தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்கா போன்ற நாடுகளிலும் 30 மில்லியனுக்கும் அதிகமான கிரிக்கெட் பிரியர்கள் இதனை கருத்திற்கொண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும் இந்த முன்னெடுப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று நம்பலாம்.