ஒலிம்பிக் 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இத்தாலி..!

ஒலிம்பிக் 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இத்தாலி..!

டோக்கியோவில் இடம்பெற்று வருகின்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலிக்கு தங்கம் கிடைத்தது.

கடந்த மூன்று ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட்டின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில், இம்முறை உசைன் போல்ட் இல்லாத நிலையில் ரசிகர்களுக்கு இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யாருக்கு தங்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த ஜேக்கப்ஸ் 9.8 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.