ஓடி ஓடியே பெற்றுக்கொண்ட 4 ஓட்டங்கள்- பட்லர் , படிக்கல் சாதனை (வீடியோ)

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான சம்பவம் ஒன்று இன்று பதிவானது,

ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் மற்றும் அவரது சக தொடக்க வீர்ர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் ஓவர்த்ரோ (over throw) போன்ற எதனதும் உதவியின்றி விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடி நான்கு ரன்களை முடித்து அமர்களப்படுத்தினர்.

3வது ஓவரின் கடைசி பந்தில் உமேஷ் யாதவ் வீசிய பந்து வைட் ஆஃப் பேக்வர்ட் பாயிண்டில் அடித்தே 4 ரன்கள் ஓடிமுடித்தனர்.

வெங்கடேஷ் ஐயர் பந்தை துரத்திச்சென்று  பவுண்டரியை காப்பாற்றினார், ஆனால் கிரீஸில் இருந்த இருவரும் ஏற்கனவே நான்கு ஓட்டங்களை ஓடி முடித்திருந்தனர்,

நான்காவது ஓட்டத்தை ஓடி முடிகின்ற போது மட்டும் கொஞ்சம் சிரமத்தை எதிர் கொண்டு Run out வாய்ப்புக்கான ஒரு நிலைமை உருவானதே தவிர மற்றும்படி மிகச்சிறப்பாக அந்த நான்கு ஓட்டங்களையும் படிக்கல், பட்லர் ஆகியோர் ஓடிமுடித்து அமர்க்களப்படுத்தினர்.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 217 ஓட்டங்கள் குவிக்க, இந்த தொடரின் 2-வது சதத்தை பட்லர் தனதாக்கியமையைம் குறிப்பிடத்தக்கது.

வீடியோ ?