ஓமான் அணியில் கலக்கும் பாகிஸ்தானின் இளம் நட்சத்திரம்..!

ஓமான் அணியில் கலக்கும் பாகிஸ்தானின் இளம் நட்சத்திரம்..!

ஐசிசி டுவென்டி20 உலக கிண்ண போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவருகின்றன.

முதல் சுற்று ஆட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பங்களாதேஷ் மற்றும் ஓமன் அணிகளுக்கிடையிலான போட்டியில் வங்கதேச அணி போராட்டத்திற்கு மத்தியில் 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஓமான் அணி சார்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஃபயாஸ் பட் அதிகம் பேசப்படுகிற வீரராகியிருக்கிறார்.

குறிப்பாக 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இளையோர் உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்த இவர் ,இப்போது ஓமான் அணிக்காக விளையாடி வருகிறார்.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் பாபர் அசாம் உள்ளிட்டவர்களுடன் விளையாடி ஆட்டநாயகன் விருதையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.