ஓமான் தொடருக்கு பின்னர் இலங்கை உலகக்கிண்ண அணியில் வரும் நான்கு வீரர்கள்- மீண்டும் அணியில் வரும் அதிரடி மாற்றம்..!
இலங்கையில் உலகக்கிண்ண அணியில் இன்றைய நாளில் நான்கு மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
குறிப்பாக இலங்கை அறிவிக்கப்பட்டிருந்த அணியில் ஒரு சில வீரர்கள் உபாதையால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஓமான் அணியுடனான இரண்டு T20 போட்டிகளின் அடிப்படையில் வீரர்கள் காட்டிய திறமையை இலக்காக வைத்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நுவான் பிரதீப்புக்கு பதிலாக ஒரு பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது, இது மாத்திரமல்லாமல் அல்லது தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக இன்னும் ஒரு துடுப்பாட்ட வீரர் கொண்டுவரவும் தேவை இருக்கிறது.
பத்தும் நிஸங்க அணிக்குள் வர வாய்ப்புகள் இருக்கின்றன ,ஆக மொத்தத்தில் இலங்கை தேர்வாளர்கள் இன்றைய நாளில் லஹிரு குமார ,பினுர பெர்னான்டோ , அகில தனஞ்சய,பத்தும் நிஸங்க ஆகிய நான்கு வீரர்களையும் 15 பேர் கொண்ட உலக கிண்ணத்தின் பிரதான அணியில் சேர்க்க இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக்கிண்ண அணியில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின், அதற்கான இறுதி திகதியாக இன்றைய 10ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த மாற்றங்களை விரைவில் இலங்கை தேர்வாளர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.
##################################
Latest Update ???
நாங்கள் மேலே குறிப்பிட்டதன்படி இலங்கை கிரிக்கட் சபை அணியில் மாற்றம் செய்து புதிய அணியை அறிவித்துள்ளது.
அதன்படி அணியில் பத்தும் நிஸங்க, லஹிரு குமார, பினுர பெர்னான்டோ, அகில தனஞ்சய ஆகியோர் சேர்கப்பட்டுள்ளனர்.
புதிய அணி..