ஓய்வறையில் பான்டை திட்டும் ரோகித் சர்மா -வைரல் வீடியோ…!

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் toss வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் பான்ட் ஆட்டமிழந்த விதம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட இந்த ஆட்டம் இழப்புக்குப் பின்னர் ரோகித் சர்மா ஓய்வறையில் பான்டை திட்டிய காட்சி வைரலாக பரவி வருகின்றது.

இப்போது வாசிம் ஜஃபார் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அடுத்துவரப்போகும் ஆட்டங்களில் இந்தியாவுக்காக ஐந்தாமிடத்தில் பான்ட் ஆடுவது என்பது சந்தேகத்துக்கு உரியது எனவும், அவருக்கு பதிலாக இன்னொருவரை இணைப்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யவேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பான்டை ரோகித் திட்டும் வீடியோ ?