ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல டென்னிஸ் வீராங்கனை!

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலக தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டி டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

25 வயதில் அவர் ஓய்வை அறிவித்தது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது ஓய்வு குறித்து ஆஷ்லிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே?

View this post on Instagram

A post shared by Ash Barty (@ashbarty)

ஆஷ்லிக் பேசுகையில், “இன்று என் வாழ்வில் கடினமான, உணர்வுப்பூர்வமான நாள். நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அதற்காக என் தோழியை துணைக்கு அழைத்துள்ளேன். உண்மையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓய்வை அறிவிக்க தயாராக இருக்கிறேன். டென்னிஸ் எனக்காக என்னவெல்லாம் கொடுத்ததோ அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கனவுகளை நிறைவேற்றிய டென்னிஸ், அதையும் தாண்டி நிறைய செய்துள்ளது. ஆனாலும், நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன். எனது ரேக்கட்டை வைத்துவிட்டு மற்ற கனவுகளை துரத்த ஆயத்தமாகிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

இவர் 2011-ல் விம்பிள்டன் ஜூனியர் பட்டம், 2021-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டம், இடையில் 2019-ல் பிரெஞ்ச் ஓபன் என்று வெற்றிகளைக் குவித்தவர் 2022 ஜனவரியில் அஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தையும் கைப்பற்றினார்