ஓய்வை அறிவித்த நடுவர்- ஒக்சென்போர்ட்

கிரிக்கெட் களத்தில் பிரபலமானவராக திகழும் அவுஸ்திரேலியாவின் புரூஸ் ஒக்சென்போர்ட், நடுவர் பணியிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

15 ஆண்டுகாலமாக நடுவர் பணியை சிறப்பாக ஆற்றிய ஒக்சென்போர்ட் , அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியே நடுவர் பணியில் தனது இறுதி போட்டி என்று அறிவித்துள்ளார்.

60 வயதான இவர்,டரில் ஹார்ப்பர், டரெல் ஹேர் , சைமன் தாயூபில் , ரோட் டக்கர் ,ஸ்டீவ் டேவிஸ் ஆகிய ஆஸ்திரேலிய நடுவர்களை தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட டெஸ்ட்டில் கடமையாற்றிய 6 வது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிஸ்பேன் டெஸ்ட் இவரது 62 வது டெஸ்ட் போட்டியாகும்.